இத்திரைப்படத்தில் ரஜினி, அக்சய் குமார் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததோடு அல்லாமல், காட்சிகளை அழகாக செதுக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கு முன்னர், நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்திருப்பதாகவும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே, இத்திரைப்படம் சீனாவிலும் மொழி மாற்றம் செய்து திரைக்காண இருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் சுமார் 10,000 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகும் என நம்பப்படுகிறது. அவற்றில், 47,000 திரைகள் 3டி திரைகள் எனக் கூறப்படுகிறது.
அனைத்துலக திரைப்பட நிறுவனங்களான யூனிவர்சல், டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களைச் சார்ந்த திரைப்படங்களை சீனாவில் வெளியீட்டு வரும் HY நிறுவனம் , லைகாவுடன் இணைந்து 2.0 திரைப்படத்தை சீனாவில் வெளியிடவுள்ளது.