Home நாடு சீ பீல்ட்: மேலும் 16 பேர் கைது

சீ பீல்ட்: மேலும் 16 பேர் கைது

1626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வாரம் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் 16 பேர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுவரையிலும், இக்கலவரம் குறித்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது. இக்கைது நடவடிக்கை கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தலைவர் முகமட் புசி ஹருண் தெரிவித்தார்.   

மேலும் கூறிய அவர், இதற்கு முன்னதாக 28 சாட்சிகளை இக்கலவரம் குறித்து தகவல் தர அழைத்திருந்ததாகவும், தற்போது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில்  அந்நபர்கள் யாரேனும் உள்ளனரா என்பதனை காவல் துறையினர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.