Home நாடு சீ பீல்ட்: 83 பேர் இதுவரையில் கைது, 28 சாட்சிகள் முன் வர அழைப்பு

சீ பீல்ட்: 83 பேர் இதுவரையில் கைது, 28 சாட்சிகள் முன் வர அழைப்பு

874
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 83 பேர் இருவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறை தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார். இக்கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை தேடும் பணி மேலும் துரிதப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.   

இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை புக்கிட் அமான் தலைமையகம் 28 பேர் அடங்கிய புகைப்படங்களை வெளியிட்டு, இக்கலவரம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் முன் வந்து இக்கலவரம் குறித்து விவரங்களை காவல் துறையினருக்கு தெரிவிப்பர் என நம்புவதாக புசி கூறினார்.

#TamilSchoolmychoice