Home நாடு முகநூல் பதிவு குறித்து கணபதிராவ் காவல் துறையிடம் வாக்குமூலம்

முகநூல் பதிவு குறித்து கணபதிராவ் காவல் துறையிடம் வாக்குமூலம்

812
0
SHARE
Ad

ஷா அலாம்: சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவிடமிருந்து காவல் துறையினர் நேற்று திங்கட்கிழமை வாக்குமூலம் பெற்றனர். சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் தனது முகநூல் பதிவு இனங்களுக்கிடையே பதற்றச் சூழலை ஏற்படுத்தும் வண்ணம் இருந்ததாகக் குறிப்பிட்டு கேள்விகள் கேட்கப் பட்டன என்றார் அவர்.

இரு குறித்து காவல் துறையினரின் கேள்விகளுக்கு தாம் பதில் அளித்துள்ளதாகவும், தமது அப்பதிவு இனங்களுக்கிடையில் பதற்றச் சூழலை ஏற்படுத்தும் எண்ணத்தில் பதிவிடப்படவில்லை என்றார். குறிப்பிட்ட ஒரு கும்பல் கோயிலில் அத்துமீறி நுழைந்ததை குறித்து அவர் குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், பேசிய கணபதிராவ், காவல் துறையினர் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரிப்பதோடு, இம்மாதிரியான கும்பல்களினால் மலேசிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் நடந்திராமல் பாதுகாக்க கோரியதாகவும் கூறினார்.