Home கலை உலகம் விஜய் 26: சமூக ஊடகங்களில் இரசிகர்களின் கொண்டாட்டம்

விஜய் 26: சமூக ஊடகங்களில் இரசிகர்களின் கொண்டாட்டம்

1774
0
SHARE
Ad

சென்னை: சினிமாவில் கால் பதித்து தற்போது 26 ஆண்டுகள் கடந்துள்ள விஜய்யின் இரசிகர்கள் #26YrsOfThalapathyVIJAY எனும் ‘ஹாச்டேக்’ (hashtag) உருவாக்கி முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் உலாவ விட்டிருக்கிறார்கள். 26 வருட சினிமா அனுபவத்தில் விஜய்யின் பல்வேறு பரிமாணங்கள் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக இரசிகர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் அவருடைய ஆடல் திறனையும் நடிப்புத் திறனையும் புகழ்ந்து பேசிய இரசிகர்கள், தற்போது அவர் தேர்தெடுக்கும் இயக்குனர் மற்றும் திரைப்படக் கதைகளை பெருமையாகப் பேசுகின்றனர். இதற்கிடையே, அவர் நடித்து வெளியாகிய கத்தி, மெர்சல், மற்றும் சர்கார் திரைப்படங்களில் அரசியல் குறித்த பார்வைகள் ஆழமாகப் பேசப்பட்டு வருகிறது. இவர் அரசியலில் கால் பதிக்கும் ஆவலையும் இரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

தற்பொழுது ‘தளபதி 63’ திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் நடந்து வருவதாகவும், இப்படத்திற்காக விஜய்க்கு சிறப்பாக, உடல் பயிற்றுனர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, நடிப்பது முடிவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அட்லீ இயக்கத்தில் மெர்சல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ‘தளபதி 63’ நல்லதொரு திரைப்படமாக வெளிவரும் என இரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.