Home நாடு சீ பீல்ட் கோயில்: சுமுகமான முறையில் தீர்வு காணும் – வேதமூர்த்தி

சீ பீல்ட் கோயில்: சுமுகமான முறையில் தீர்வு காணும் – வேதமூர்த்தி

1000
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைவர்களும் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் விவகாரத்தில் இணக்கமான தீர்வை அடைவதற்கு நெருக்கமாக உழைத்து வருவதாக அமைச்சர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார். இக்கோயிலில் நடந்த பதற்ற நிலையை தற்பொழுது மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசாங்கக் குழு சிறப்பாக கண்காணித்து வருவதாகவும், இக்கோயிலின் நிலம் மற்றும் நிர்வாகம் குறித்து பேசி வருவதாகவும் தனது பத்திரிக்கை செய்தியில் தெரிவித்தார். 

தற்போதைய கோயிலின் நிர்வாகத் தலைவர்கள், கோயிலின் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொண்டு, சட்டபூர்வமான பொதுமக்கள் கொண்ட குழு ஒன்று இக்கோயிலின் நிர்வாகத்தை இயக்க வேண்டுமென்று மலேசிய இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

கடந்த நவம்பர் 29-ம் தேதி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) டோமி தோமஸ், தங்களது சர்ச்சைக்குத் தீர்வு காண அனைத்து தரப்புகளையும் அவர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மலேசிய இந்து சங்கம் இந்த கோயில் விவகாரத்தில் ஒரு நடுவராக செயல்படுவதற்கான அவசியம் தேவையில்லை, ஏனெனில் மத்திய மற்றும் மாநில அளவிலான குழுக்கள் ஏற்கனவே இவ்விவகாரத்தில் கோயிலின் நலனை பாதுகாப்பதில் வழிமுறைகளை கையாண்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.