Home நாடு தமிழ்ப் பள்ளிகள்: புதிய கட்டிடங்கள் இருந்தும் பயன்படுத்த இயலாத சூழல்!

தமிழ்ப் பள்ளிகள்: புதிய கட்டிடங்கள் இருந்தும் பயன்படுத்த இயலாத சூழல்!

1211
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தில் இரு தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்பட்டு இன்னமும் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 18 மாதங்களாக கட்டுமானம் மற்றும் சீரமைப்புப் பணிகள் முடிந்தும் இப்பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கிறன.

தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி சுமார் 6.8 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டமைக்கப்பட்டு தற்போது, கட்டுமானம் தகுதி தரச் சான்றிதழ் (Certificate of Fitness) கிடைக்காதப் பட்சத்தில் செயல்பட இயலாமல் இருக்கிறது என அதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ பி. பாலமுரளி தெரிவித்தார்.

இதற்கிடையே, சிம்பாங் ரெங்காமில் அமைந்துள்ள துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப் பள்ளி, அப்பள்ளியைத் தொடர்புப்படுத்தும் பாதை அமையப் பெறாத பட்சத்தில் செயல்பட இயலவில்லை என இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கேசவன் கூறினார்.

#TamilSchoolmychoice

தெப்ராவ் தோட்டப் பள்ளியின் பழையக் கட்டிடம் புதியதாக அமைக்கப் பெற்ற கட்டிடத்தின் எதிரே உள்ளதாகவும், இப்பள்ளி சுமார் 65 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த 65 ஆண்டு காலத்தில் இப்பள்ளி, வெள்ளம் மற்றும் மின்சாரப் பிரச்சனையை எதிர் கொண்டதை அவர் நினைவுக் கூர்ந்தார். 200 மாணவர்கள் கொண்டு செயல்பட வேண்டிய இப்பழையக் கட்டிடம், தற்போது 400 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருவதாகக் கூறினார்.

துன் டாக்டர் இஸ்மாயில் பள்ளியைப் பற்றிக் கூறுகையில், இப்பள்ளியின் பழைய கட்டிடம் துன் டாக்டர் இஸ்மாயில் தோட்டத்தில் இருப்பதாகவும், நகரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளதால், நகரத்திலிருந்து இத்தோட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர் என்றும் கூறினார்.

மேலும் கூறிய கேசவன் கல்வி அமைச்சர் மற்றும் மாநிலத் தலைவர்கள் இப்பள்ளியை பார்வையிட்டு கூடிய விரைவில் இதற்கானத் தீர்வைக் காணுவர் என நம்பிக்கை கொண்டார்.  

மேற்கண்ட செய்தியை ஸ்டார் இணைய ஊடகம் வெளியிட்டுள்ளது.