Home நாடு 1எம்டிபி: ஜோ லோவுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை

1எம்டிபி: ஜோ லோவுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை

1637
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஜோ லோ மற்றும் மற்ற  1எம்டிபி தொடர்புடைய நான்கு முதலீட்டாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று இவர்கள் நீதிமன்றத்திற்கு வராததை கருத்தில் கொண்டு, இவர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் அமர்வு (செசன்ஸ்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

ஜோ லோ அவரது தந்தை லேரியுடன் ஆகஸ்ட் மாதம் புத்ராஜெயா அமர்வு செசன்ஸ் நீதிமன்றத்தில் பண மோசடியில் ஈடுபட்டதற்காக குற்றஞ்சாட்டப்பட்டார்.

#TamilSchoolmychoice

இது குறித்துப் பேசிய, மலேசிய காவல் துறை தலைவர் முகமட் புசி ஹருண், ஜோ லோ மற்றும் அவர் தந்தையை கைது செய்வதற்கு மலேசிய காவல்துறை அனைத்துலக காவல் துறையின் உதவியை நாடும் என்றார்.