Home நாடு 1எம்டிபி: முன்னாள் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்

1எம்டிபி: முன்னாள் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்

925
0
SHARE
Ad
டான்ஸ்ரீ அபாண்டி அலி

கோலாலம்பூர்: முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என பிரதமர் துறை துணை அமைச்சர் ஹனிபா மைடின் குறிப்பிட்டிருக்கிறார்.  

2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தலைமை வழக்கறிஞராக அபாண்டி நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1எம்டிபி குறித்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று அபாண்டி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் மத்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப மாமன்னர் சுல்தான் முகமட் அபாண்டியின் சேவையை நிறுத்த ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.