Home Featured நாடு இன்று மஇகா மறு-தேர்தல்: 2 மணி நேரத்தில் வாக்களிப்பு; பிற்பகலுக்குள் முடிவுகள்!

இன்று மஇகா மறு-தேர்தல்: 2 மணி நேரத்தில் வாக்களிப்பு; பிற்பகலுக்குள் முடிவுகள்!

465
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று காலை 8.30 மணிக்கு செர்டாங்கிலுள்ள விவசாயப் பூங்கா மண்டபத்தில் தொடங்கும் மஇகாவின் 67வது பொதுப் பேரவை அதிகமான விவாதங்கள் இன்றி அரை மணி நேரத்திற்குள் நடந்து முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேசியப் பொதுப் பேரவையுடன் மஇகாவின் மறு-தேர்தல்களும் நடைபெறவிருப்பதால், தேர்தல் காய்ச்சலில் இருக்கும் பேராளர்கள் ஆண்டறிக்கை, கணக்கறிக்கைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தேர்தல் வாக்களிப்பு உடனடியாகத் தொடர்ந்து நடைபெறுவதற்கு இடமளிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

MIC-Dinner-67 Assembly-5 Nov 2015நேற்று செர்டாங் விவசாயப் பூங்கா மண்டபத்தில் நடைபெற்ற இரவு விருந்துபசரிப்பில் திரளாகக் கலந்து கொண்ட பேராளர்கள்….

 காலை 9.00 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு இரண்டே மணி நேரத்தில் நிறைவு பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும், திறந்தமயமான முறையிலும் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் பிற்பகல் 1.30 மணிக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் தேசியப் பொதுப் பேரவையை முன்னிட்டு பேராளர்களுக்கு நேற்று டாக்டர் சுப்ரா இரவு விருந்துபசரிப்பு வழங்கி உபசரித்தார்.

காலை 11 மணிக்குத் தேர்தல்கள் முடிவடையும் என்றும் அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு பிற்பகல் 1.00 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கும் மஇகா பொதுப் பேரவையின் அதிகாரபூர்வத் தொடக்க விழாவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு மாநாட்டை அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பார்.

மாநாட்டைத் திறந்து வைக்க பிரதமர் வருகை தரும் போது, மஇகாவுக்கான மறுதேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பர்.

மஇகாவில் இந்த முறைதான் இது போன்று வித்தியாசமான முறையில் தேசியப் பொதுப் பேரவையும், மஇகா தேர்தல்களும் நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.