Home Featured இந்தியா விருதை திருப்பிக் கொடுப்போர் பட்டியல் நீள்கிறது – அருந்ததிராயும் ஒப்படைத்தார்!

விருதை திருப்பிக் கொடுப்போர் பட்டியல் நீள்கிறது – அருந்ததிராயும் ஒப்படைத்தார்!

501
0
SHARE
Ad

Arundhati-Roy.-007புது டெல்லி – இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துவருவதாகக் கூறி கலைஞர்களும், எழுத்தாளர்களும் தங்கள் விருதுகளை அரசிடமே திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். நாளுக்கு நாள் நீளும் இந்த பட்டியலில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயும் இணைந்துள்ளார்.

‘இன் விச் ஆனி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ்’  (In Which Annie Gives it Those Ones ) என்ற திரைப்படத்தின் திரைக்கதைக்காக தேசிய விருது பெற்று இருந்த அருந்ததிராய், இன்று தனது விருதை அரசிடம் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தீவிரவாதம் சூழ்ந்த ஒரு நிலையில் தங்களுக்கு எப்போது என்ன நடக்கும், யார் நம்மை என்ன செய்வார்களோ? என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படுகிற இந்த தேசத்தில் தலித்துகள் கழுத்தறுக்கப்படுவதும், எரித்துக் கொல்லப்படுவதும் தொடர்கிறது.”

#TamilSchoolmychoice

“விருதுகளை திருப்பி ஒப்படைக்கிற இந்த அரசியல் போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 24 பேர் தங்கள் விருதுகளை அரசிடமே திரும்ப ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.