Home Featured இந்தியா இன்று காலை டில்லி கொண்டு வரப்படும் சோட்டா ராஜன்! விமான நிலையத்தில் அதிரடிப் படை காவல்!

இன்று காலை டில்லி கொண்டு வரப்படும் சோட்டா ராஜன்! விமான நிலையத்தில் அதிரடிப் படை காவல்!

593
0
SHARE
Ad

chota-rajanபுதுடில்லி – நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து, உலகின் பல நாட்டு காவல் துறைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பியிருந்த மும்பாய் நகரின் பிரபல தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலித் தீவில் அந்த நாட்டு போலீசாரால் பிடிபட்டான்.

அவனை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்தோனேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டதை அடுத்து சோட்டாராஜன் இந்தியக் காவல் துறையினரால் புதுடில்லி கொண்டு வரப்படுகின்றான்.

இன்று காலை புதுடில்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்படும்  சோட்டா ராஜன் இந்தியக் காவல் துறையினரால் காவலில் வைக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருவான்.

#TamilSchoolmychoice

அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் புதுடில்லி பாலம் விமான நிலையத்தில் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. இந்திய அதிரடிக் காவல் படையினர் குவிந்துள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)