Home Featured இந்தியா “சோட்டா ராஜன் கொல்லப்படுவான்” – தாவூத் கூட்டாளி பகிரங்க அறிவிப்பு!

“சோட்டா ராஜன் கொல்லப்படுவான்” – தாவூத் கூட்டாளி பகிரங்க அறிவிப்பு!

703
0
SHARE
Ad

chhota-rajan-latest-11மும்பை – 1990-களில் மும்பையை ஆட்டிப்படைத்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளியும், இந்தியக் காவல்துறை 20 வருடங்களாக தேடி வந்த முக்கியக் குற்றவாளியுமான சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி நகரில், கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டான். அதன் பிறகு அவனை இந்தியக் காவல்துறை, இங்கு நாடு கடத்தியது.

சோட்டா ராஜனைக் கொல்ல, தாவூத் கும்பல் குறி வைத்துள்ள நிலையில், தாவூத்திற்கு நெருக்கமான கூட்டாளியாக இருக்கும் சோட்டா ஷகீல், திகார் சிறையில் சோட்டா ராஜன் கொல்லப்படுவான் என பகிரங்க அறிவிப்பினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான்.

Know-about-Chhoதாவூத் இப்ராகிம்(இடது), சோட்டா ஷகீல்(வலது)

#TamilSchoolmychoice

‘மெயில் டுடே’ (Mail Today) நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக அவன் அளித்த பேட்டியில், “எங்கள் தொழிலில் நாங்கள் 99 சதவீதம் கவனம் செலுத்தி வருகின்றோம். எங்களின் மீதி கவனத்தை, எங்கள் எல்லையைத் தாண்டுபவர்களுக்கு பாடம் கற்பிக்க செலவழிக்கிறோம். சோட்டா ராஜனை எங்களின் எதிரியாகக் கூட நாங்கள் மதிக்கவில்லை. எங்களுக்கு எதிராக அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறான். அந்த முயற்சியை அவன் தற்போது இருக்கும் சிறையில் செய்து கொள்ளட்டும். திகார் சிறையில் அவன் கொல்லப்படுவான்” என்று கூறியுள்ளான்.