புது டெல்லி – இந்தியா கடந்த 20 வருடங்களாக தேடி வந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைதானார். இது தொடர்பாக இந்தோனேசிய அரசு, இந்திய அரசுக்கு அளித்த தகவல் படி, அங்கு சென்ற இந்திய அதிகாரிகள் சோட்டா ராஜனை சமீபத்தில் இந்தியா அழைத்து வந்தனர்.
இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளது தெரிய வந்துள்ளது. உள்நாட்டில் உயர் மட்டத்தில் சில காவல்துறை அதிகாரிகள் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பில் இருப்பதாக சோட்டா ராஜன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சோட்டா ராஜனை பாலியில் வைத்து கொலை செய்ய இப்ராகிம் ஒரு ஆளை நியமித்து இருந்ததாகவும், குறிப்பிட்ட அந்த நபரிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே சோட்டா ராஜன் வலிய இந்தோனேசிய காவல்துறையிடம் சரண் அடைந்ததாகவும் நம்பத்தகுந்த இடங்களில் இருந்து புதிய தகவல்கள் உலா வருகின்றன.