Home Featured நாடு பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வணிகப் பகுதிக்கு மஇகா தலைவர்கள் வருகை!

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வணிகப் பகுதிக்கு மஇகா தலைவர்கள் வருகை!

758
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த மஇகா மறு-தேர்தல்களில் வெற்றி பெற்ற மஇகா தலைவர்கள் உடனடியாக அடுத்த நாளே தங்களின் முதல் நிகழ்ச்சியாக, தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திற்கு நேற்று சனிக்கிழமை மாலை வருகை தந்தனர்.

இரண்டு வார கால தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட தலைவர்கள் கூட ஒரே மஇகா குடும்பமாக இணைந்து, லிட்டல் இந்தியா வணிகப் பகுதியில் ஒன்றாக நடந்து சென்று, இறுதி நேர தீபாவளிப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்களோடு கலந்து கொண்டதோடு, பிரிக்பீல்ட்ஸ் வட்டார வணிக நிலவரங்களையும், வணிகர்களின் பிரச்சனைகளையும் கண்டறிந்தனர்.

Brickfields-President-walkabout

#TamilSchoolmychoice

பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் நடைப் பயணம் செல்வதற்கு முன்னால் உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கும் மஇகா தலைவர்கள்…

குறிப்பாக, தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் மோதிக் கொண்ட டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும், டத்தோ எம்.சரவணனும் தங்களின் அரசியல் பகைமைகளை மறந்து தேசியத் தலைவரோடு இந்த வருகையில் இணைந்து கலந்து கொண்டனர்.

Brickfields-Subra-devamany-saravanan

கடைத் தெருவுக்கு வருகை தரும் டாக்டர் சுப்ராவுடன், தேவமணி, சரவணன்….மற்ற தலைவர்கள்…

Brickfields-walkabout-subra-MIC leaders

வணிகர்களிடம் வணிகம் குறித்து விசாரித்து அறிந்து கொள்ளும் டாக்டர் சுப்ரா, அருகில் துணைத் தலைவர் தேவமணி, உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ ஜஸ்பால் சிங்….

-செல்லியல் தொகுப்பு