பாஜக தலைமையிலான கூட்டணி 61 இடங்களை மட்டும் வென்றுள்ளது. இது பாஜகவிற்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
மற்ற கட்சிகள் 7 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன.
இருப்பினும், மாட்டிறைச்சி உண்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை போன்ற பாஜகவின் சில அண்மையக்கால பிரச்சாரங்கள் மக்களிடையே எதிர்மறையான தோற்றத்தை அக்கட்சிக்கு ஏற்படுத்துகின்றன என்பதை பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.
இதன் காரணமாக, உலக அரங்கிலும், இந்திய அளவிலும் தனது மதிப்பு உயர்ந்து வருவதை பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்திருந்தாலும், இன்னொரு புறத்தில், பாஜகவின் சில தலைவர்கள் கூறிவரும் கருத்துக்களால், பாஜகவின் செல்வாக்கு பாதிப்படைகின்றது என்பதையும் மோடி உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாக, இனி மோடியின் அணுகுமுறையிலும், பாஜகவின் பிரச்சாரங்களிலும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லல்லு பிரசாத்-நிதிஷ்குமார்
இதற்கிடையில் நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்த முன்னாள் பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், முதல்வராக நிதிஷ்குமார் நியமிக்கப்பட, தான் ஆதரவளிப்பதாகவும், மாநில அரசியலை இனி நிதிஷ் பார்த்துக்கொள்வார் என்றும் தாங்கள் டில்லியைக் கலக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
-செல்லியல் தொகுப்பு