Home Featured கலையுலகம் கமலின் கருத்து எதிர்ப்பு கிளம்பியாச்சு – பூதாகரமாகுமோ?

கமலின் கருத்து எதிர்ப்பு கிளம்பியாச்சு – பூதாகரமாகுமோ?

593
0
SHARE
Ad

Kamalசென்னை – கமல்ஹாசன் எப்போதெல்லாம் மத ரீதியிலான தனது கருத்துகளை முன் வைக்கிறாரோ, அப்போதெல்லாம் கண்டிப்பாக எதிர்ப்பு கிளம்புவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சமீபத்தில், தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியின் போது, தன்னை பாராட்டி தரப்படும் கடவுள் வடிவ சிலையினால் எந்த பயனும் இல்லையென்றும் அதனை உருக்கி பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தார். இதற்கு இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு கலைஞனுக்கு அந்த சிலை வடிவில் உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டாமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்திருந்தால் எப்படி?

“கமல்ஹாசன் குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் பேசுகிறார். தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லாதது என்பதை அறியாதவர், தன்னை பகுத்தறிவுவாதி என்று கூறியிருப்பது வேடிக்கையானது”

#TamilSchoolmychoice

“கடவுளை சந்தித்தால், உலகில் ஏன்  எத்தனை வேறுபாடு என இறைவனை கேட்பேன் என்று கூறும் கமல்ஹாசன்,  தனது அனைத்து படத்திலும் தான் எப்படி இருக்கிறாரோ? அப்படியே நடிக்க வேண்டியதுதானே. தசாவதாரம் படத்தில்  பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். அவர் இருப்பது போலவே நடித்தால் அவருகே சலித்து விடாதா?  ஆனால் உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது”

“கடவுளுக்கு அனைத்து மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்துகொண்டு பேசுவது சிறுப்பிள்ளைத்தனமானது.”

“அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை அறிந்துகொண்டு அந்த மொழியில் பேசி நடிப்பது இல்லையா? அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவது ஏன்?” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், ராமகோபாலன் விருதை திருப்பி அளிப்பது தொடர்பான கமலின் கருத்திற்கு வரவேற்பு அளிக்கவும் தவறவில்லை.