Home Featured இந்தியா ஆரத்தழுவிக் கொண்ட மோடி-ஷரிப் – தவிடு பொடியான பகையுணர்வு!

ஆரத்தழுவிக் கொண்ட மோடி-ஷரிப் – தவிடு பொடியான பகையுணர்வு!

620
0
SHARE
Ad

modiபுது டெல்லி – இந்திய பிரதமர் மோடி, நேற்று திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்றதும், அங்கு லாகூர் விமான நிலையத்திற்கே வந்த, அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷரிப், மோடியை ஆரத் தழுவி வரவேற்றதும் காணக் கிடைக்காத காட்சி என இரு நாட்டு செய்தி ஊடகங்களும், நட்பு ஊடகங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றன. இரு நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் இது தான் என்று கூறப்படுகிறது. மோடி மேற்கொண்ட இந்த முயற்சியை, காஷ்மீர் பிரிவினைவாதிகளும் பாராட்டி உள்ளனர்.

மோடியின் இந்த திடீர் பயணம், இரு நாட்டு உறவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதனை உணர்த்தும் வகையில் தான், இரு நாட்டுத் தலைவர்களும் நடந்து கொண்டனர். மோடி வருகையின் போதும், அவர் நாடு திரும்புகையிலும், நவாஸ் ஷரிப் விமான நிலையத்திற்கே வந்த உபசரித்தது, ஷரிப் இல்லத்தில் அவரது குடும்பத்தாருடன் மோடி பேசி மகிழ்ந்தது, இரு நாடுகளின் பகையை போக்குவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Modi-Sharif-PTIமோடியும் தனது டுவிட்டர் பதிவில் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

modi11அவர், “நான் லாகூர் விமான நிலையத்திற்கு வந்த போதும், மீண்டும் நாடு திரும்பிய போதும் விமான நிலையத்திற்கு வந்த நவாஸ் ஷரிப்பின் உபசரிப்பில், நெகிழ்ந்து போனேன். அவரது குடும்பத்தாருடன், அவரது இல்லத்தில் நேரம் செலவழித்தேன். நவாஸ் ஷரிப்பின் பிறந்தநாள், அவரது பேத்தியின் திருமண நிகழ்ச்சிகள் போன்றவை இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மோடியின் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?

உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் தலைவர்களுள் மோடி முக்கியமானவர். இந்நிலையில் அவர் நேரடியான அறிவிப்புகளுடன் பாகிஸ்தான் செல்வது, பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கலாம் என்பதால், அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.