Home Featured நாடு தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி!

தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி!

512
0
SHARE
Ad

Rafiziகோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பான நேரடி விவாதத்தை அதன் தலைவர் அருள் கந்தா, நாடாளுன்ற உறுப்பினர் டோனி புவாவுடனான தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.

இந்த நேரடி விவாதத்தில் டோனி புவாவுக்குப் பதிலாக ரம்லி பங்கேற்பார் என எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ளது.

1எம்டிபி விவகாரம் என்பது தேச நலன் சார்ந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ள ரம்லி, இதை ஒரு வார்த்தைப் போராக கருதிவிடக் கூடாது என்றார்.

#TamilSchoolmychoice

நேரடி விவாதத்தில் இருந்து டோனி புவா விலகியது குறித்து அருள் கந்தா வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்துரைத்த போதே ரம்லி இவ்வாறு கூறினார்.

“இந்த நேரடி விவாதம் தமக்கும் டோனி புவாவுக்கும் இடையேயானது என்று அருள் கந்தா இதுவரை கூறி வந்தது சரியல்ல. ஏனெனில் இது தேச நலன் சார்ந்த, மக்களைப் பாதிக்கக் கூடிய விவகாரம். மாறாக தனிப்பட்ட விஷயமல்ல. அருள் கந்தா 1எம்டிபியில் சேர்வதற்கும் முன்பே, கடந்த 2011 முதல் நானும், டோனி புவாவும் 1எம்டிபி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறோம்” என்று ரம்லி தெரிவித்தார்.

நேரடி விவாதம் குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகர் கூறியதை அருள் கந்தா தவறாக புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ரம்லி, இதற்கு சபாநாயகர் கூறியதைக் கேட்க அருள் கந்தா நாடாளுமன்றத்தில் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.

“நேரடி விவாதத்துக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஒப்புக் கொண்ட அருள், சில நாட்களிலேயே விவாதிக்க விருப்பம் இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது” என்றும் ரம்லி மேலும் கூறியுள்ளார்.