அண்மையக் காலங்களில் இந்தியப் படங்கள் சீனாவில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை புரிந்து வருகின்றன. அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்ட ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
ஜூன் 28-ஆம் தேதி சிறப்புக் காட்சியாக திரையிடப்படும் 2.0 அதைத் தொடர்ந்து ஜூலை 12-ஆம் தேதி சீனா முழுக்க பெரும் அளவில் திரையீடு காண்கிறது.
2.0 வெளியீடு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “சீனாவில் 2.0. தயாராக இருக்கிறீர்களா?” என்ற பொருளில் பதிவிட்டிருக்கிறார்.
படத்தின் இயக்குநர் ஷங்கரும் 2.0 சீனாவில் வெளியிடப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.