Home கலை உலகம் வரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்!

வரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்!

1364
0
SHARE
Ad

சென்னை: கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகி இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைக்கத் தயாராக உள்ளது.

சமிபத்தில், ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம், பாகுபலி 2 திரைப்படத்தின் மொத்த வசூலையும் முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சென்னையில் மட்டும் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனைப் படைத்த முதல் படம் எனும் பெயரையும் இத்திரைப்படம் அடைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவிலேயே அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும்.