பெட்டாலிங் ஜெயா: முன்னாள் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ அப்துல் அசீஸ் ஷேக் பாட்சிர், உத்துசான் மலாயு பெர்ஹாட் நிருவாக வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று வியாழக்கிழமைத் தெரிவித்தார்.
அப்பதவியை ஏற்று ஆறு மாதக் காலமே பூர்த்தி அடையும் வேளையில், அவரது தனிப்பட்ட வணிக கடமைகள் காரணமாக இந்த முடிவை அசீஸ் அறிவித்தார் என உத்துசான் தெரிவித்தது.
இதற்கு முன்னர் அந்நிறுவனத்தின் 5 இயக்குனர்கள் பதவியை விட்டு விலகியதும், அசீஸ் கடந்த ஜூன் 7-ம் தேதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
இரண்டு வாரங்களுக்கு முன்னர், அம்னோவுக்குச் சொந்தமான அந்நிறுவனம், செயல்பாட்டு செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில், 800 ஊழியர்களுக்கு தன்னார்வ விடுப்புத் திட்டத்தின் (Voluntary Separation Scheme) வழி வேலை நிறுத்தக் கடிதத்தை வழங்கியது.