Home நாடு “விவாதத்திற்கு வர மறுக்கிறார்” – குவான் எங் மீது வீ கா சியோங் குற்றச்சாட்டு!

“விவாதத்திற்கு வர மறுக்கிறார்” – குவான் எங் மீது வீ கா சியோங் குற்றச்சாட்டு!

846
0
SHARE
Ad
வீ கா சியோங்

பாகான் – கடலடி சுரங்கப்பாதை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவாதத்திற்கு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வர மறுப்பதாக மசீச துணைத்தலைவர் வீ கா சியோங் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பாகான் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இது குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய வீ கா சியோங், “நான் எத்தனையோ முறை விவாதத்திற்கு அழைத்தும் லிம் வர மறுத்து மழுப்பி வருகின்றார்.

“விவாதத்திற்கு அம்னோவில் இருக்கும் சில அடிமட்டத் தலைவர்களை அழைக்கிறார். ஏன் ஐஜிபி காலிட் அபு பக்கரை கூற விவாதத்திற்கு அழைக்கிறார். ஒரு முதல்வர், அவருக்கு இணையான ஒருவருடன் தான் விவாதிக்க வேண்டும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் என்னைப் போல் கூட்டரசு அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை” என்று வீ கா சியோங் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice