Home நாடு பாலோ தொகுதியில் ஜசெக சார்பில் ஷேக் ஓமார் அலி போட்டி!

பாலோ தொகுதியில் ஜசெக சார்பில் ஷேக் ஓமார் அலி போட்டி!

668
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – 14-வது பொதுத்தேர்தலில், ஜோகூர், பாலோ தொகுதியில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில், முன்னாள் பாஸ் போராட்டவாதி ‌ஷேக் ஓமார் அலி போட்டியிடுவார் என ஜசெக அறிவித்திருக்கிறது.

தற்போது ஜசெக கட்சியின் துணை விளம்பரப் பிரிவுச் செயலாளராக பதவி வகித்து வரும் ஷேக் ஓமார், கடந்த 2015-ம் ஆண்டு பாஸ் கட்சியிலிருந்து விலகி, ஜசெக கட்சியில் இணைந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, ஜோகூர், பாலோ தொகுதியில் உள்ள ஜசெக பாலோ பொதுத்தேர்தல் மையத்தில், அக்கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், ஷேக் ஓமார் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த 13-வது பொதுத்தேர்தலில் பாலோ தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட ஷங்கர் ரெங்கநாதன், 7,428 வாக்குகள் பெற்று 103 வாக்குகள் வித்தியாசத்தில், மசீச தியோ யாப் குன்னிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.