Home நாடு ஜோகூர் ஜெயாவைத் தக்க வைக்கிறார் லியாவ் சாய் துங்!

ஜோகூர் ஜெயாவைத் தக்க வைக்கிறார் லியாவ் சாய் துங்!

924
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – 14-வது பொதுத்தேர்தலில், ஜோகூர் ஜெயா சட்டமன்ற தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான லியாவ் சாய் துங், தனது தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என ஜசெக அறிவித்திருக்கிறது.

ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஜோகூர் ஜெயாவில் நடைபெற்ற தேர்தல் தயார்நிலை விருந்தில், லியாவ் சாய் துங் மீண்டும் தனது தொகுதியிலேயே போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

13-வது பொதுத்தேர்தலில், ஜோகூர் ஜெயா சட்டமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட லியாவ் சாய் துங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மசீச வேட்பாளர் தான் சேர் புக்கை 1,460 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.