Home நாடு லிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது

லிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது

1210
0
SHARE
Ad
இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் லிம் குவான் எங்

ஜோர்ஜ் டவுன் – நிதி அமைச்சர் லிம் குவான் பங்களா வாங்கியது தொடர்பான வழக்கு இன்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

தான் விடுதலை செய்யப்பட்டதற்கு லிம் குவான் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, அடுத்து நாட்டின் நிதிப் பிரச்சனைகளைத் தான் தீவிரமாகக் கவனிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.

எனினும், லிம் குவான் எங்கும், வணிகப் பெண்மணி பாங் லி கூன்னும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த முடிவு முழுக்க முழுக்க அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

சில அரசு சார்பற்ற இயக்கங்கள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முடிவைச் சாடியதோடு, அவர் பதவி விலக வேண்டும் என்றும், ஏன் இந்த வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன என்பதற்கான விளக்கங்களை அவர் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

பினாங்கு முதல்வராகப் பணியாற்றிய காலகட்டத்தில் லிம் குவான் எங் வாங்கிய பங்களாவின் விற்பனைப் பரிமாற்றத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அவருக்கும் பாங் லி கூன் என்பவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை மீட்டுக் கொண்டது.

அதைத் தொடர்ந்து குவான் எங், பாங் லி கூன் இருவரும் பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.