Home கலை உலகம் செக்கச் சிவந்த வானம் : ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முகநூலில் நேரலையாகப் பாடல்கள்

செக்கச் சிவந்த வானம் : ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முகநூலில் நேரலையாகப் பாடல்கள்

1084
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரையில் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்துள்ளது.

அடுத்த கட்டமாக இந்தப் படத்தின் பாடல்கள் அறிமுக விழா எதிர்வரும் புதன்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி வித்தியாசமான முறையில் நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் முகநூல் பக்கத்தின் வழி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் செக்கச் சிவந்த வானம் படத்தின் பாடல்களை நேரலையாகப் படைக்கவிருக்கிறார். இதன் மூலம் இரசிகர்கள் அனைவரும் நேரடியாக இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டைக் கண்டு இரசிக்க முடியும்.

செக்கச் சிவந்த வானம் பாடல்களின் நேரலை ஒளிபரப்பு குறித்த மேலும் விரிவான விவரங்கள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice