Home Video 4 மில்லியன் பார்வையாளர்களுடன் “செக்கச் சிவந்த வானம்” முன்னோட்டம்

4 மில்லியன் பார்வையாளர்களுடன் “செக்கச் சிவந்த வானம்” முன்னோட்டம்

1098
0
SHARE
Ad

சென்னை – பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் “செக்கச் சிவந்த வானம்” இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த “காற்று வெளியிடை” அவ்வளவாக வெற்றியைக் காணவில்லை.

கார்த்தி – அதிதி ராவ் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை அற்புதமான ஒளிப்பதிவையும், இனிமையான பாடல்களையும் கொண்டிருந்தாலும், திரைக்கதையில் பல ஓட்டைகள் இருந்ததால், இரசிகர்களை ஈர்க்கவில்லை.

அதற்கடுத்து அதிரடியாக ஏராளமான நட்சத்திரங்களுடன் திரைக்கதை ஒன்றை அமைத்து “செக்கச் சிவந்த வானம்” என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

#TamilSchoolmychoice

வழக்கம்போல் மணிரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் விரைவில் திரையீடு காணவிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு, 46 இலட்சத்துக்கும்  (4.6 மில்லியன்) மேற்பட்ட பார்வையாளர்களுடன் யூடியூப் தளத்தில் உலாவந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் இன்றைய முன்னணி நட்சத்திரங்களைக் கொண்ட காட்சிகள் பார்ப்பவர்களை கவரும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-