Home கலை உலகம் பிலிம்பேர் விருதுகளை குவித்தது பர்பி, கஹானி

பிலிம்பேர் விருதுகளை குவித்தது பர்பி, கஹானி

761
0
SHARE
Ad

priyangkaமும்பாய், ஜனவரி 22 – சினிமா துறையில் இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் பிலிம்பேர் விருதும் ஒன்று.

2012ம் ஆண்டில் வெளிவந்த பாலிவுட் படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடந்தது. இதில் ரன்பீர், இலியானா, ப்ரியங்கா சோப்ராவின் (படம்) வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த பர்பி படமும், கர்ப்பிணி வேடத்தில் வித்யாபாலன் நடித்த கஹாணி படமும் விருதுகளை குவித்தன.

சிறந்த நடிகை, சிறந்த டைரக்டர் உள்ளிட்ட 5 விருதுகளை கஹாணி குவித்தது. அதே போல் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த புதுமுகம் உள்ளிட்ட பல விருதுகளை பர்பி குவித்தது.

#TamilSchoolmychoice

பிலிம்பேர் விருதுகள் குவித்த படங்களும், விவரங்களும்…

சிறந்த நடிகர் – ரன்பீர் கபூர் (பர்பி)

சிறந்த நடிகை – வித்யாபாலன் (கஹாணி)

சிறந்த படம் – பர்பி

சிறந்த டைரக்டர் – சுஜாய் கோஷ் (கஹாணி)

சிறந்த புதுமுக நடிகர் – அயுஸ்மான் குரானா (விக்கி டோனர்)

சிறந்த புதுமுக நடிகை – இலியானா (பர்பி)

சிறந்த புதுமுக இயக்குனர் – கவுரி ஷிண்டே (இங்கிலீஷ் விங்கிலீஷ்)

சிறந்த துணை நடிகர் – அனு கபூர் (விக்கி டோனர்)

சிறந்த துணை நடிகை – அனுஷ்கா சர்மா (ஜப் தக் ஹை ஜான்)

சிறந்த எழுத்தாளர் – ஜூகி சதுர்வேதி (விக்கி டோனர்)

சிறந்த வசனம் – அனுராக் ‌காஷ்யாப், அகிலேஷ் ஜெய்ஸ்வால், சச்சின் கே லதியா, ஜெயிசன் கதாரி (கேங்ஸ் ஆப் வசிப்பூர்)

சிறந்த படத்தொகுப்பு – நமர்தா ராவ் (கஹாணி)

சிறந்த ஒளிப்பதிவாளர் – சேது (கஹாணி)

கிரிட்டிக் பிரிவின் கீழ் சிறந்த படம் – ஹேங்ஸ் ஆப் வசிப்பூர்

கிரிட்டிக் பிரிவின் கீழ் சிறந்த நடிகர் – பான் சிங் (தோமர்)

கிரிட்டிக் பிரிவின் கீழ் சிறந்த நடிகை – ரிச்சா சந்தா (ஹேங்ஸ் ஆப் வசிப்பூர்)

வாழ்நாள் சாதனையாளர் விருது – யாஷ் ஷோப்ரா