பாரிஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் (படம்), தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டனர்.
இந்த திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9 படம் திரையிடப்பட்டதும், அதனை பார்த்த பார்வையாளர்களில் பெரும்பாலானோரை கவர்ந்தது. இவ்விருதுக்கு இப்படம் தகுதியானதுதான் என்பதை இந்த திரைப்பட விழாவில் இப்படத்திற்கு கிடைத்த விருதும் வரவேற்பும் நிரூபித்துள்ளது.
ஆசிய நாடுகளில் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் மிக முக்கிய விருதான தெற்காசிய திரைப்பட விருதினை பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேலுவுக்கும், வழக்கு எண் படக் குழுவினருக்கும் பல இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.