Home உலகம் அமெரிக்க அதிபர் பதவியேற்பு அமெரிக்கா களைகட்டுகிறது

அமெரிக்க அதிபர் பதவியேற்பு அமெரிக்கா களைகட்டுகிறது

893
0
SHARE
Ad

obamaஅமெரிக்கா,ஜன.21-அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் ஒவ்வொருவரும் ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி பதவி ஏற்று வருகின்றனர்.

அந்த அடிப்படையில் பராக் ஒபாமா தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வந்து நேற்று சம்பிரதாய பூர்வமாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

சத்தியப் பிரமாணம் எடுத்ததும் அவர் தனது மனைவியை கட்டித்தழுவி அன்பை தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

திங்களன்று  ஐரோப்பிய நேரம் நான்கு மணிக்கு பொது மக்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் பதவியேற்பு வைபவத்தை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். இதற்கான விழாவில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்கிறார்கள்.

அமெரிக்காவின் 44 வது அதிபராக இவர் 2009 இல் பதவியேற்றார் அதைத் தொடர்ந்து இரண்டாவது பருவத்திற்கான பதவியேற்பு வைபவம் இன்று  நடக்கிறது.

தனது மூத்த மகளை அதிக முக்கியப்படுத்தும் ஒபாமா இம்முறையும் சத்தியப் பிரமாணமடங்கிய அமெரிக்க சட்டப் புத்தகத்தை மகளின் கையிலேயே கொடுத்து அடுத்த வாரிசை அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததையும் காண முடிந்தது.