Home கலை உலகம் சென்னையிலிருந்த சினிமாவை நான் கிராமத்துக்கு கொண்டு வந்தேன் – பாரதிராஜா

சென்னையிலிருந்த சினிமாவை நான் கிராமத்துக்கு கொண்டு வந்தேன் – பாரதிராஜா

757
0
SHARE
Ad
bharthi rajaசென்னை,ஜன.22-கிராமத்திலிருந்த என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றது சினிமா… அந்த சினிமாவை சென்னையிலிருந்து கிராமத்துக்கு அழைத்து வந்தேன், என்றார் இயக்குநர் பாரதிராஜா.
பாரதிராஜா தயாரித்து இயக்கி வரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது.
இசைஞானி இளையராஜா தலைமை ஏற்று இசைக் குறுந்தகட்டை வெளியிட, அதை இயக்குநர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா பெற்றுக் கொண்டனர். பாரதிராஜாவுக்கு இது 50வது படம் என்பதால், அவரை வாழ்த்திப் பேச தமிழ் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திரண்டிருந்தனர்.
விழாவில் பாரதிராஜா பேசுகையில், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகருக்கு பல சிறப்புகள் உண்டு. இங்கிருந்து சென்ற இளையராஜா போன்ற பல சினிமா கலைஞர்கள் உலக அளவில் பெருமை பெற்று உள்ளனர். எனக்கு இங்குள்ள மக்கள் கலாச்சார பிச்சை அளித்தனர். சினிமா என்னை சென்னைக்கு அழைத்து சென்றது. அந்த சினிமாவை, நான் கிராமத்துக்கு அழைத்து வந்து உள்ளேன். இதுதான் என் சாதனை. கலைப்பயணத்தை தொடங்கிய மதுரையிலேயே, எனது 50-வது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவது பெருமை அளிக்கிறது,” என்றார்.