Home இந்தியா மொகாலியில் எகிறியது டிக்கெட் விலை உலக கோப்பை அரையிறுதியை விட அதிகம்

மொகாலியில் எகிறியது டிக்கெட் விலை உலக கோப்பை அரையிறுதியை விட அதிகம்

1038
0
SHARE
Ad

Cricket-Ground-336மொகாலி, ஜன.22- இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மொகாலி ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

நான்காவது போட்டி வரும் 23ம் தேதி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2011ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இங்கு மோதிய உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விலையை விட, அதிகம்.

#TamilSchoolmychoice

2011ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய, உலக கோப்பை அரையிறுதி போட்டி இங்குதான் நடந்தது.

பரபரப்பான போட்டி என்பதால் ரசிகர்கள் அதிக விலை கொடுத்து, போட்டியை காண தயாராகவுள்ளனர்.

டிக்கெட் விலை, மிகவும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பலர் இப்போட்டியை வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.