Home One Line P1 காற்பந்து ஜாம்பவான் டத்தோ எம்.சந்திரன் காலமானார்!

காற்பந்து ஜாம்பவான் டத்தோ எம்.சந்திரன் காலமானார்!

1298
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: தேசிய காற்பந்து ஜாம்பவான் டத்தோ எம்.சந்திரன் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் அம்பாங் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் காலமானதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

77 வயதான சந்திரன் கடுமையான நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு முன்பு கோலாலம்பூர் மருத்துவமனையில் சுமார் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1942-இல் பேராக் சுங்கை சிப்பூட்டில் பிறந்த சந்திரன், 1960-களின் முற்பகுதியில் காற்பந்தில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் அனைத்துலக அளவில் 163 முறை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வலுவான பாதுகாப்பைக் கட்டியெழுப்பினார்.

#TamilSchoolmychoice

1972-ஆம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதிலும், தென் கொரியா மற்றும் ஜப்பானை தோற்கடித்து 1974-ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றதிலும் தேசிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் அவரது வாழ்க்கையின் சிறப்பம்சமாகும்.