Home One Line P1 சுல்தான் முகமட்டின் தந்தை சுல்தான் இஸ்மாயில் காலமானார்!

சுல்தான் முகமட்டின் தந்தை சுல்தான் இஸ்மாயில் காலமானார்!

887
0
SHARE
Ad

கோத்தா பாரு: சுல்தான் முகமட்டின் தந்தையான சுல்தான் இஸ்மாயில் பெட்ரா சுல்தான் யஹ்யா பெட்ரா இன்று சனிக்கிழமை காலை கோத்தா பாருவில் உள்ள சைனாப் II மகளிர் மருத்துவமனையில் காலமானார்.

கிளந்தான் துணைப் பிரதமர் முகமட் அமார் அப்துல்லா மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது இதை உறுதிப்படுத்தியதாகப் பதிவிட்டுள்ளது.

முன்னதாக, கிளந்தான் மாநில அரச மன்றம் ஓர் அறிக்கையில் அவரது உடல் கோத்தா பாருவில் உள்ள அரண்மனை மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அறிவித்தது.

#TamilSchoolmychoice

சுல்தான் இஸ்மாயில் பெட்ராவின் உடல் சடங்கிற்காக பொதுச் சபை அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும். மேலும், பிரார்த்தனைக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் மற்றும் அவரது உடல் கோத்தா பாரு கிளந்தானின் அரச கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.