Home One Line P1 ஐநா உரையில் ஜம்மு, காஷ்மீர் குறித்துப் பேசிய மகாதீர்

ஐநா உரையில் ஜம்மு, காஷ்மீர் குறித்துப் பேசிய மகாதீர்

1200
0
SHARE
Ad

நியூயார்க் – நேற்று வெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய துன் மகாதீர், வழக்கத்திற்கு மாறாக இந்தியாவின் ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.

ஐநாவின் தீர்மானம் இருந்த போதும் ஜம்மு காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறிய மகாதீர், இதற்கு காரணங்கள் இருக்கலாம் ஆனால் அந்த நடவடிக்கை தவறானது என்று வலியுறுத்தினார். அமைதியான வழிமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

ஐநா பொதுப் பேரவையில் மலேசியப் பிரதிநிதிகள்

இந்தியா இந்தப் பிரச்சனையில் பாகிஸ்தானோடு இணைந்து காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார். ஐநாவின் கோரிக்கைகளை புறக்கணிப்பது சட்டநீதியைப் புறக்கணிப்பதற்கும் ஐநாவின் மற்ற கோரிக்கைகளையும் நிராகரிப்பதற்கும் இட்டுச் செல்லும் என மகாதீர் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் நேற்று ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எதனையும் பேசவில்லை. இதன்மூலம் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை என்பதை மோடி உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மகாதீரின் உரையை மலேசியத் தொலைக்காட்சி அலைவரிசை ஆர்டிஎம் 1 இன்று மலேசிய நேரம் அதிகாலை 3.00 மணியளவில் நேரலையாக ஒளிபரப்பியது.