Home One Line P2 அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஜோதிகா நடிப்பில் “ஜாக்பாட்”

அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஜோதிகா நடிப்பில் “ஜாக்பாட்”

929
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜோதிகா நடிப்பில் ‘ராட்சசி’  படம்  வெளிவந்து ஒரே மாத இடைவெளியில் ஜோதிகாவின் அடுத்த படமான “ஜாக்பாட்” அண்மையில் வெளிவந்தது. ரேவதியும், ஜோதிகாவும் இணைந்து கலக்கும் இந்தப் படத்தைக் கல்யாண் இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தில் ஜோதிகாவும் ரேவதியும் சாதுரியமாக மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு ஆணுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் இவர்கள் இருவருக்கும் உண்டு என்பது போன்று படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

காவல் துறையிடம் சிக்காமல் சாதுரியமாக ஏமாற்றி வரும் இவர்கள், ஒரு நாள் திரையரங்கில் ஏற்பட்ட பிரச்சனையின் போது காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்குகிறார்கள். இதனால் சிக்கலில் மாட்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அங்கு சச்சு என்பவரை சந்திக்கிறார்கள். சச்சு மூலம் இவர்களுக்கு ஒரு ஜாக்பாட் தொடர்பான துப்பு கிடைக்க அது செல்வந்தர் ஆனந்த்ராஜ் வீட்டில் இருக்கிறது என இவர்கள் அறிகின்றார்கள்.

அந்த ஜாக்பாட் என்ன? ஆனந்த்ராஜூக்கு தெரியாமல் ஜாக்பாட்டை எடுத்தார்களா? இல்லையா? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஆன்ந்த்ராஜ் போன்ற நடிகர்கள் இணைந்து நகைச்சுவை விருந்து படைத்துள்ள இத்திரைப்படத்தைத் தற்போது அஸ்ட்ரோ பர்ஸ்ட் (Astro First) அலைவரிசையில் கட்டணம் செலுத்தி வாங்கி கண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, இத்திரைப்படத்தை ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு களிக்கலாம்.

அண்மையில் அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஒளியேறிய அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடை, இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபு மற்றும் தமன்னா நடித்த தேவி 2, சூர்யாவின் என்ஜிகே, விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சாம் சி.எஸ் இசையில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்த 100 ஆகிய திரைப்படங்கள் தற்போது ஆன் டிமாண்ட் சேவையில் வழங்கப்படுகிறது.

நம்முடைய உள்ளூர் திரைப்படங்களான ‘அழகிய தீ’ மற்றும் ‘குற்றம் செய்யேல்’ திரைப்படங்களையும் கண்டு மகிழலாம்.

மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையத் தளத்தை வலம் வரலாம்.