Home One Line P1 “மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் தலைவர், மலாய்க்காரர்களுக்கு மட்டும் அல்ல”!- மசீச

“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் தலைவர், மலாய்க்காரர்களுக்கு மட்டும் அல்ல”!- மசீச

852
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த மாதம் நடைபெற உள்ள மலாய் தன்மான காங்கிரசில்’ பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் திட்டமிட்ட வருகை, ஒரு பன்முக நாட்டில் பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்று மசீச உதவித் தலைவர் டி லியான் கெர் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

பாஸ் மற்றும் அம்னோ அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மத்திய அரசியலமைப்பின் நோக்கத்தை நிலைநிறுத்துவது பற்றி பேசும் நேரத்தில், நம்பிக்கைக் கூட்டணி இன ரீதியிலான விளையாட்டை கையில் எடுத்திருப்பது பற்றி அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் பிரதமருக்கு ஆலோசனை வழங்க ஜசெகா முன்வர வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

கடந்த காலங்களில்கெதுவானன் மெலாயு‘ (மலாய் மேலாதிக்கம்) குறித்து ஜசெக கடுமையாக கண்டனம் செய்தது. தற்போது, ஜசெக காது கேளாததது போலவும், கண்மூடித்தனமான கண்ணைக் கட்டியிருப்பதும் முரணாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு முக்கியத் தலைவர்களின் வருகை பதற்றத்தை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும். மேலும், புதிய மலேசியா அரசாங்கத்தின் கீழ் இப்போது உருவாகி வரும் மலேசியாவின் பல்லின சமூகத்திற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

மகாதீர் ஒரு மலாய் தலைவர் மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் என்பதை நினைவுபடுத்த வேண்டும் என்று டி கூறினார்.

மலாய் தன்மான காங்கிரஸ் அடுத்த மாதம் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலிலில் நடைபெற உள்ளது.