Home One Line P2 நாங்குநேரியில் காங்கிரசின் ரூபி மனோகரன் களம் இறங்குகிறார்!

நாங்குநேரியில் காங்கிரசின் ரூபி மனோகரன் களம் இறங்குகிறார்!

946
0
SHARE
Ad

சென்னை: நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் குழுத் தலைவர் ரூபி மனோகரனை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. டெல்லியில் கட்சியின் உயர்மட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் ஆர்வலர்களில் ஒருவரும், முன்னள் விமானப்படை வீரருமான மனோகரனுக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனோகரன் ரூபி குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிருவாக இயக்குநராக உள்ளார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியையும் வைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அடுத்த மாதம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் இரண்டு தொகுதிகளில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாகும். மற்ற தொகுதியான விக்கிரவாண்டி, கட்சியின் கூட்டணியான திமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ரூபி மனோகரன் எதிர்கொள்கிறார்.