நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொது சபையில் நடந்த கூட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழில் பேசி மக்களை கவர்ந்துள்ளார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான கலாசாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் பழமையான இந்திய மொழியான தமிழில், கவிஞர் கணியன் பூங்குன்றனார் ”யாதும் ஊரே, யாதும் கேளிர்” என்ற உயரிய கருத்தை தெரிவித்துள்ளார் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பண்பாடும், கலாசாரமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பலர் பல விதமாக கருத்துகள் தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் இம்மாதிரியான தருணங்களை போற்றியே வருகின்றனர்.