Home One Line P2 இந்தியாவிலிருந்து போர்ட் கார் நிறுவனம் கட்டம் கட்டமாக வெளியேறுகிறது

இந்தியாவிலிருந்து போர்ட் கார் நிறுவனம் கட்டம் கட்டமாக வெளியேறுகிறது

883
0
SHARE
Ad

புதுடில்லி – பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் கார் தொழில் செழித்து வளரும் என்றும் மிகப் பெரிய அளவில் விரிவடையும் என்றும் கணிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த முதல் அமெரிக்க கார் நிறுவனங்களுள் ஒன்று போர்ட் மோட்டார் நிறுவனம் (Ford).

ஆனால், தற்போது இந்தியாவில் கார் வணிகம் நசிந்து வரும் நிலையில் அங்கிருந்து கட்டம் கட்டமாக வெளியேறும் முடிவை போர்ட் அறிவித்திருக்கிறது.

அதன்படி முதல்கட்டமாக கார் தொழிலில் தனது இன்னொரு பரம எதிரியான மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது போர்ட். அந்த இரு நிறுவனங்களும் இணைந்து அமைத்துள்ள புதிய கூட்டு நிறுவனத்தில் போர்ட் 49 விழுக்காட்டுப் பங்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு எஞ்சிய பெரும்பான்மை 51 விழுக்காட்டுப் பங்குகளை மஹிந்திரா நிறுவனத்திடமே விட்டுக் கொடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

போர்ட் நிறுவனத்தின் பெரும்பான்மையான கார் தொழில் சொத்துகள் இனி இந்தப் புதிய கூட்டு நிறுவனத்திற்கு மாற்றப்படும்.

இந்தப் புதிய கூட்டு நிறுவனம் 2020-இல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். போர்ட் கார்களை இந்தியாவில் மேம்படுத்தும், சந்தைகளை ஏற்படுத்தும், விற்பனை செய்யும் பணிகளை இனி இந்தப் புதிய கூட்டு நிறுவனம் மேற்கொள்ளும்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களையும், போர்ட் வாகனங்களையும் இந்தக் கூட்டு நிறுவனம் அயல்நாடுகளிலும் இந்தக் கூட்டு நிறுவனம் விற்பனை செய்யும்.