Home One Line P1 தஞ்சோங் பியாய்: அம்னோ, மசீசவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உள்நோக்கம் கொண்டுள்ளதா?

தஞ்சோங் பியாய்: அம்னோ, மசீசவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உள்நோக்கம் கொண்டுள்ளதா?

655
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதி குறித்து அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரச்சாரக் காலமும், (நவம்பர் 2 முதல் 16 வரை) வாக்களிக்கும் நாளும் கோலாலம்பூரில் அம்னோ பொதுக் கூட்டம் நடைபெறும் தேதிகளுடன் ஒத்துப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

பல தேதிகள் உள்ளன. ஆயினும், தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே அந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது. தேர்தலில் ஈடுபட இருக்கும் ஏதாவதொரு கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையம் உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்என்று மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மசீச கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியான அம்னோவின் ஆண்டு பொதுக் கூட்டத் தேதியுடன் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தேதி மற்றும் பிரச்சார காலம் ஒத்துப்போவதை மசீசவும் கேள்வி எழுப்பியுள்ளது.

கணித கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, தேர்தல் அத்தேதியில் நடப்பதற்கான நிகழ்தகவு மிகக் குறைவு என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

“0.00000001 விழுக்காடு நிகழ்தகவு மட்டுமே இது நடப்பதற்கான சாத்தியம்” என்று அவர் கூறினார்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தேர்தலுகான வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் நவம்பர் 2-ஆம் தேதி என்றும்,  வாக்களிக்கும் நாள் நவம்பர் 16-ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

இது நவம்பர் 13 முதல் 16 வரை நடைபெறும் அம்னோ பொதுக் கூட்டம் மற்றும் நவம்பர் 2 மற்றும் 3 வரை நடைபெறும் மசீச பொதுக் கூட்டத் தேதிகளுடன் ஒத்து போகிறது.