Home One Line P2 காந்தி பிறந்த நாள்: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மோடி எண்ணம்!

காந்தி பிறந்த நாள்: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மோடி எண்ணம்!

897
0
SHARE
Ad
படம்: நன்றி நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்

புது டில்லி: மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று புதன்கிழமை (அக்டோபர் 2) உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

கடந்த 2014-இல் காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இன்று காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் வேளையில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் அறிவிப்பை மோடி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது