Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்

விடுதலைப் புலிகள் விவகாரம் : ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்

680
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜசெக உறுப்பினர் பி.குணசேகரன் மற்றும் ஜி.சாமிநாதன் இருவரும் நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சொஸ்மா எனப்படும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் காவலில் இருக்கும் அவர்கள் இருவரும் ஆயர் குரோவில் இருக்கும் மலாக்கா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்.

அவர்கள் இருவருடன் இன்னொரு தனிநபரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறார். அவர்கள் மூவரையும் ஜசெக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ராம் கர்ப்பால் சிங் தலைமையிலான வழக்கறிஞர் குழு நீதிமன்றத்தில் பிரதிநிதிக்கும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இன்னொரு நபர் நாளை கோலகங்சார் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்றும் அவரைப் பிரதிநிதித்து தான் வழக்காடவிருப்பதாகவும் ஜெலுத்தோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்துள்ளார். அவர் ஜசெக உறுப்பினர் இல்லை எனினும் அவர் எங்களின் உதவியை நாடியிருப்பதால் அவருக்கும் நாங்கள் சட்ட உதவிகள் வழங்கவிருக்கிறோம் என ராயர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மேலும் எழுவர் கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு  மற்றும் ஜோகூர் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் மொத்தம் 12 பேர் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.