Home One Line P1 மெர்டேக்கா 118 கட்டிடம் கோலாலம்பூரின் புதிய அடையாளமாக மிளிரும்!

மெர்டேக்கா 118 கட்டிடம் கோலாலம்பூரின் புதிய அடையாளமாக மிளிரும்!

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்டால் (பிஎன்பி) கட்டப்பட்டு வரும், மெனாரா மெர்டேக்கா 118 கட்டிடம் தற்போது 42 விழுக்காடு நிறைவடைந்து, 84-வது தளத்தை அடைந்துள்ளது. இக்கட்டிடத்தின் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பெர்மோடாலான் நேஷனல் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஜெடி அக்தார் அசிஸ் கூறுகையில், மெர்டேக்கா 118 கட்டிடம் வரலாற்று மற்றும் சமகால கட்டிடக்கலைகளின் நம்பமுடியாத கலவையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“118 மாடி மெர்டேக்கா கட்டிடம் 1957-இல் மலேசியாவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட ஸ்டேடியம் நெகாரா மற்றும் ஸ்டேடியம் மெர்டேகா ஆகிய இரண்டு தேசிய அடையாளங்களையும் எதிர்கொண்டு நிறுவப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள், 835 மீட்டர் கொண்ட இக்கட்டிடம் கோலாலம்பூரின் புதிய அடையாளமாக இருக்கும்என்று அவர் தெரிவித்தார்.