Home One Line P1 தஞ்சோங் பியாய்: தேசிய முன்னணி வேட்பாளர் தேர்வில் பாஸ் கட்சி உடன்படுகிறது!- தகியுடின்

தஞ்சோங் பியாய்: தேசிய முன்னணி வேட்பாளர் தேர்வில் பாஸ் கட்சி உடன்படுகிறது!- தகியுடின்

578
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங்கை பாஸ் ஆதரிக்கிறது என்று அதன் பொதுச் செயலாளர் தகியுடின் ஹசான் தெரிவித்தார்.

நவம்பர் 16-ஆம் தேதியன்று நடைபெறும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரான மசீசவின் வீ ஜெக் செங்கின் தேர்வுக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உடன்படுகிறார் என்பதை நான் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறேன்.” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது அம்னோ, பாஸ் தேசிய ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்திற்கு ஏற்பாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நவம்பர் 2-ஆம் தேதி வேட்புமனு நாளில் கலந்து கொள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதிநிதிகளாக அனுப்பப்படுவார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்றிரவு புதன்கிழமை, ஜோகூர் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட், தேசிய முன்னணி வேட்பாளர் அறிவிப்பை நேரடியாக முகநூல் வழியாக அறிவித்தார்.

இரு முறை தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீ, கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபீக்கிடம் தோல்வியுற்றார்.