Home One Line P2 ஐஸ் அமைப்பின் புதிய தலைவராக அல் இப்ராகிம் நியமனம்!

ஐஸ் அமைப்பின் புதிய தலைவராக அல் இப்ராகிம் நியமனம்!

826
0
SHARE
Ad

திமிஷ்கு: அண்மையில் அமெரிக்க இராணூவத்தினால் கொல்லப்பட்ட அல் பக்டாடிக்குப் (படம்) பதிலாக ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராகிம் அல் ஹாஷிமி நியமிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

இத்தகவலை டெலிகிராம் செயலி மூலமாக ஐஎஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐஎஸ் அமைப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உலகளவில் தீவிரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

அப்போது தொடங்கி அமெரிக்க படைப்பிரிவுகளாலும், அதன் கூட்டணி படைகளாலும் தேடப்பட்டு வந்த பாக்டாடிக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கடந்த புதன்கிழமை அல் பக்டாடி கொல்லப்பட்டதை உறுதிசெய்யும் காணொளி காட்சிகளை பெண்டகன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.