Home உலகம் பெண்ணின் அழகை வர்ணித்ததற்கு மன்னிப்பு கேட்டார் ஒபாமா

பெண்ணின் அழகை வர்ணித்ததற்கு மன்னிப்பு கேட்டார் ஒபாமா

511
0
SHARE
Ad

obamaஅமெரிக்கா, ஏப்.6- அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழிப் பெண்ணின் அழகை குறித்து மேடையில் கருத்து தெரிவித்ததற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ். இவர் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.ஒபாமாவின் தீவிர ஆதரவாளரான இவர் நேற்று முன்தினம் ஒபாமாவுடன் ஓரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய ஒபாமா, கமலா ஹாரிஸ் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர், சட்டத்தை நிலைநாட்டுவதில் மனோதிடம் மிக்கவர், எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரையில் அமெரிக்க அட்டார்னி ஜெனரலாக இருந்தவர்களில் மிகவும் கவர்ச்சியானவர் என்று அவரை புகழ்ந்தார்.

பொது மேடையில் பெண்களின் அழகை வர்ணிப்பது அதிபர் பதவிக்கு கண்ணியமான செயல் அல்ல என அமெரிக்க ஊடகங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அதிபர் ஒபாமா கமலாவிடம் நேற்று மன்னிப்பு கேட்டதாக வெள்ளைமாளிகை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. தன்னுடைய கருத்தால், அவரது செயல்பாடுகளையோ, திறமையையோ குறைவாக மதிப்பிடப்படமுடியாது என்று அதிபர் கருதியதாக வெள்ளை மாளிகை பிரஸ் செக்ரெட்டரி ஜே கார்னே கூறியிருக்கிறார்.