Home One Line P1 அரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்!- மகாதீர்

அரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்!- மகாதீர்

965
0
SHARE
Ad
படம்: நன்றி அவானி

கோலாலம்பூர்: பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) போன்ற தவறானதாக கருதப்படும் சட்டங்களை அரசாங்கம் விரைவில் திருத்தும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் .

கடுமையானதாகக் கருதப்படும் ஒரு சட்டத்தை திருத்துவதன் அவசியம் குறித்து நாங்கள் இரண்டு சந்திப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். சொஸ்மா விசாரணையின்றி கைது மற்றும் தடுப்புக்காவல் போன்ற கடுமையான பிரிவுகளில் மாற்றங்களை கொண்டு வரலாம்.”

#TamilSchoolmychoice

“இது விரைவில் செய்யப்படும். அது செய்யப்படாவிட்டால் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய பொதுத் தேர்தல் அறிக்கையில், “அடக்குமுறைசட்டங்களை ஒழிப்பதாக நம்பிக்கைக் கூட்டணி உறுதியளித்திருந்தது. மற்றவற்றுடன், தேசத்துரோக சட்டம் 1948, குற்றத் தடுப்புச் சட்டம் 1959, வெளியீட்டு மற்றும் அச்சிடும் சட்டம் 1984 மற்றும் கட்டாய மரண தண்டனையை இரத்து செய்வதாக அது உறுதியளித்திருந்தது.

சொஸ்மா, அமைதிக் கூட்டம் சட்டம் 2012 மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் 2015 (பிஒடிஏ) போன்ற பிற சட்டங்களையும் இரத்து செய்வதாக நம்பிக்கைக் கூட்டணி உறுதியளித்துள்ளது.

சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் தடுப்புக் காவல் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதா என வினவிய போது, இது குறித்து முன்பு நம்பிக்கைக் கூட்டணி வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால், பல காரணங்களுக்காக அதனை செயல்படுத்த முடியாததாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இப்போது மேலும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க உடனடியாக இந்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என்று அவர் கூறினார்.