Home One Line P2 ஹாங்காங்: உள்ளாட்சித் தேர்தலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியினர் முன்னணி!

ஹாங்காங்: உள்ளாட்சித் தேர்தலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியினர் முன்னணி!

771
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் ஆரம்ப முடிவுகளின்படி, நீடித்த ஹாங்காங் மக்கள் போராட்டங்கள் குறித்த சீனாவின் நிலைப்பாட்டில் உள்ளூர்வாசிகளின் நிலைப்பாட்டை தெளிவாக பிரதிபலித்துள்ளது.

கடந்த வார இறுதியில், தேர்தலில் வாக்களித்த ஹாங்காங் வாசிகள் பல மாத போராட்டங்களுக்கு ஆதரவளித்து வரும் எதிர்க்கட்சிக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர்.

போட்டியிட்ட 163 இடங்களில் 148 இடங்களை எதிர்க்கட்சிகள் வென்றதாகவும், பெய்ஜிங் சார்பு வேட்பாளர் 17 இடங்களை மட்டுமே வென்றதாகவும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தொகுதித் தேர்தல் சூடாக நடைபெற்றதாகவும், 71 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய உள்ளாட்சித் தேர்தலில், 1.47 மில்லியன் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.  இந்த முறை இந்த எண்ணிக்கை 2.8 மில்லியனை எட்டியுள்ளது.